Arungarai Amman Index Arungarai Amman History Poojaikal Arungarai Amman Location Arungarai Amman Photos Arungarai Amman Address
 
Unable to View click to download font here
வணக்கம்,

குல தெய்வம் வழிபாடு :-
நமது தமிழ் சமுதாயம் உலகில் மிகப் பழமையான மற்றும் உயரிய கலாச்சாரம் மிகுந்த சமுதாயம் ஆகும். தமிழ்நாடு "கோயில்களின் நகரம்" என்றும் சொல்லப் படுகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊர், சிற்றூர் மற்றும் கிரமங்களிலும் கண்டிப்பாக ஒரு கோயில் மட்டுமாவது இருக்கும். ஆதலால் தான் ஒரு பழமொழி "கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்று முன்னோர்கள்லால் சொல்லப் பட்டது.

தமிழகத்தில் " குல தெய்வம் வழிபாடு " என்று ஒரு பழக்கமும் மிகப் பிரபலமாகவும் கண்டிப்பாகவும் கடைப் பிடிக்கப்படுகிறது. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு குல தெய்வம் இருக்கும். அந்த தெய்வத்தை அக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல தலைமுறையாக வழிபட்டு வருவர்
குடும்பத்தில் உள்ள அனைவரும் அக்குல தெய்வத்திற்கு சிறப்பு பூசைகளும், மரியாதையும் செய்வர். அதுமட்டுமல்லாது அக்குடும்பத்தில் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகள் கல்யாணம், குழந்தைப்பேறு, திருமண நாள், வீடு வாங்குதல், நிலம் வாங்குதல், மற்றும் அனைத்து புதிய நிகழ்வுகளின் போது தங்களின் குலதெய்வத்தை வணங்கி அருள் பெறுவர்.

அதுபோல ஒரு பெண் திருமணம் ஆனபின், அவரது கணவனின் குல தெய்வத்தை பின்பற்றி வணங்குவாள். குலதெய்வம் என்பது ஒரு குடுப்பத்தின் தெய்வமாகும். தொழில் மற்றும் வேறு காரணங்களுக்காக சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு இடங்களில் வசிப்பவர்களும் வருடத்திற்கு ஒரு முறையாவது தங்களின் சொந்த கிராமத்திற்கு சென்று தங்களின் குடும்ப தெய்வமாகிய குலதெய்வத்தை வழிபடும் வழக்கம் உள்ளது.

அதுபோல் அருங்கரை அம்மன் கொங்கு வேளாளர், செங்குந்தர் சமுதாயத்தினருக்கு குலதெய்வமாக இருந்து அருள் ஆசி வழங்கி வருகிறாள்.