| அருங்கரை அம்மன் தோற்றம் |
  |
|
 |
முன்னொரு சமயம் அமராவதி நதியில் மீன் பிடித்து வாழும் வலையன் ஒருவன் ஆற்றில் வலை வீசியபோது வலையில் பேழை ஒன்று சிக்கியது. பேழையைத் திறந்து பார்த்த வலையன் உள்ளே தெய்வச் சிலைகள் திகழ்வது கண்டு அஞ்சி ஒருவருக்கும் தெறியாமல் நதிக்கரையோர வனத்துக்குள் புதைத்து வைத்தான், பிறர் அறியா வண்ணம் புதைக்கப்பாட்ட பேழையுள்ள இடத்தில் தான் மட்டுமே பூசை செய்து வந்தான்.
அந்நாளில் ஆற்றோர வனத்தில் ஆடுமாடு மேய்த்து வந்த வெண்டுவகுல கன்னிப்பெண் ஒருத்தி, வலையன் தெய்வச் சிலைகளைப் புதைத்து வைத்த இடத்தில் பசு பால் சொரிந்து வருவதைக் கண்டு தெரிவித்தாள். அவ்விடத்தில் தெய்வம் புதையுண்டிருககும் செய்தியை வலையன் மூலம் மக்கள் அறிந்தனர். அவ்வலையனையே அவ்விடத்தில் பூசை நடத்தி வரவும் எற்பாடு செய்தனர் என்று கூறப்படுகிறது.
அருங்கரை அம்மன் பெயர்க் காரணம்:-
ஆற்றில் கண்டெடுக்கப்பட்டு, ஆன்ப்பொருநை ஆற்றின், அரிய கரையில் வனத்துள் புதையுண்ட பெண் தெய்வம் ஆகையால் அரும் + கரை + அம்மன் = அருங்கரையம்மன் எனப் பெயர் பெற்றது.
இத்தெய்வத்திற்கு நல்லதாய் என்ற பெயருண்டு. கன்னி பெண்ணாக இருந்து ஆடு, மாடு மேய்த்து வந்த வெண்டுவகுலப் பெண்ணின் பெயர்தான் நல்லதாய். இளம் பெண்ணாகவே இருந்து அம்மன் சிலைகளைக் காணக் காரணமாக இருந்து நல்ல தாயும் தெய்வமானாள். தெய்வமே சிறு பெண்ணாகவே வந்து பசு மாட்டின் மூலம் தெய்வச் சிலைகள் இருக்குமிடத்தைக் காட்டிப் பின்பு இறந்து போனமையால் அக்கன்னி இளம் பெண்ணையும் தெய்வமாகவே போற்றி வணங்கி வருகிறார்கள்.
|
|
|