Arungarai Amman Index Arungarai Amman History Poojaikal Arungarai Amman Location Arungarai Amman Photos Arungarai Amman Address
 
Unable to View click to download font here
கோயில்ன் பூசை மற்றும் பழக்கங்கள்
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மறுநாள் அதிகாலை வரை கோயில் திறக்கப்ட்டிருக்கும். இரவில் மட்டும் பூசை நடைபெறும்,

சிறப்புப் பூசை வாரம் செவ்வாய்கிழமை தோறும் நடைபெறும். அடி மாதம், மார்கழி மாதம் ஆகிய மாதங்களில் இக்கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் தவறாமல் ஒரு செவ்வாய்கிழமையில் வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.

பிற கோயில்களில் நடைபெறுவது போல பொங்கல் திருவைழா முதலிய எதுவும் இக்கோயிலில் நடைபெறுவதில்லை.

இக்கோயிலில் அம்மன் உருவமற்றுப் புதையுண்ட நிலையிலுள்ளதால் அபிசேகங்கள் இல்லை. கற்பூர தீபாரதனையும், மட்டுமே நடைமெறும். பூசையின்போதி பால், தயிர், பஞ்சாமிர்தம் இவற்றை மஞ்சள் நீர் தெளித்து படையல் பொருளாக மட்டும் வைப்பதுண்டு.

பெண்கள் கோயிலின் முன் மண்டப வாயிலில் அடி விழுந்து வணங்கி கோயிலை வலம் வந்து முன் மண்டபத்துள் நின்று வடமேற்கு மூலையில் உள்ள அம்மனை மனதில் எண்ணி கற்பூரம் கொளுத்தி வழிபடுவர்.

அருங்கரை அம்மன் கோயிலில் மகாமுனிக்கு பொங்கலிட்டு ஆட்டு கிடாய் பலி தரும் வழக்கம் உள்ளது. முடிக்காணிக்கை தரும் பழக்கமும் உள்ளது.

சூறைப் பொருட்கள்.

அருங்கரை அம்மன் கோயில் வருவோர் தங்களின் விளைபொருளாகிய தேங்காய், பழம் புகையிலை, கடலை, நெல், வெல்லம் போன்ற பொருள்களை கோயிலிக்கு கொண்டு வந்து " சூறை " எனக் கூறிப் வீசுவார்கள்.